சிம்புவின் பத்து தல படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிசியாக அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் சிம்பு .

அடுத்ததாக ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

simbuu 1

தீபாவளிக்கு மறக்காம இந்த தீபாவளி லேகியம் மட்டும் செஞ்சு பாருங்க! வேற மருந்தே வேண்டாம்!

கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படம் கௌதம் கார்த்தி போலீஸ் அதிகாரியாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அளவிற்கு கதை அமைந்துள்ளது

சமீபத்தில் அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்த டீஜய் அருணாச்சலம் இந்த படத்தில் இறுதி ஷெட்யூலில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியது.

தீபாவளிக்கு ஈஸியா வீட்டுலே ரவாலட்டு பண்ணலாமா! ரெசிபி இதோ!

இந்நிலையில் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் தற்போழுது வெளியாகியுள்ளது, இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன். ரசிகர்களுடன் சிம்பு இருப்பது, இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்ற புகைப்படங்கள் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment