தனது நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மக்களிடையே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரினை தக்க வைத்து வருகிறார் நடிகர் சிம்பு. சிம்பு தனது விரல்களால் ரசிகர் பட்டாளத்தை எடுத்து வைத்தார் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. மேலும் அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் இளைஞர்கள் மத்தியில் கிளாப்ஸை கொடுக்கும் .இத்தகைய சிம்பு அவ்வப்போது சர்ச்சைக்குள் ஆளாவதும் தவிர்க்க முடியாதது தான்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் சிம்பு நடித்து கொண்டிருந்த மாநாடு திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. மேலும் இந்த ட்ரெய்லர் ஆனது ஒரு வித்தியாசமாக காணப்பட்டது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் சந்திரசேகரன் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா போன்ற பிரபலங்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த படமானது வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் காணப்படுகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அதன் பின்னர் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது