Connect with us

நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வாரி குவித்த சிம்பு படம்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!

maanadu trailer9 1

பொழுதுபோக்கு

நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வாரி குவித்த சிம்பு படம்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!

நார்வே திரைப்பட விழாவில் விருதுகளை வாரி குவித்த சிம்பு படம்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!

கடந்தாண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி புதிய சாதனை படைத்த படம் தான் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் கான்செப்ட் அடிப்படையில் வெளியான மாநாடு படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். பார்த்து பார்த்து சலித்து போன கதைகளுக்கு மத்தியில் ஒரு ஃபிரஷ்ஷான கதையாக மாநாடு அமைந்திருந்தது.

அதன் காரணமாக படம் மாபெரும் ஹிட்டானது. ஜப்பான் வரை மாநாடு வெற்றிக்கொடி நாட்டியது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்து சிம்புவின் முதல் படம் மாநாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. சிம்புவின் திரை வரலாற்றிலேயே இப்படி ஒரு வெற்றியை அவர் கண்டதில்லை.

maanaduu

அட்டகாசமான கதை மற்றும் நடிகர்கள் காரணமாக மாநாடு படம் தற்போது 50 நாட்களை தாண்டி திரையில் வெற்றிகராமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் மாநாடு படம் நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

அதன்படி சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர், சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்கிற்காக ப்ரவீன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கலைச்சிகரம் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பதையே யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து விருதுகளை குவித்து படக்குழுவினுருக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது மாநாடு படம். நிச்சயம் இப்படம் சிம்புவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top