மகிழ்ச்சி ஆர்பாட்டத்தில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ! தெறிக்க விடும் விமர்சனங்கள் !

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளதால் இந்தப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

cropped-simbu1.webp
இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அதிகாலையிலே ரசிகர்கள் திரையரங்கில் ஆராவரத்துடன் குவிந்துள்ளனர் .படத்தின் முதல் பாதி எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

பட த்தின் கதை காலம் மெதுவாக இருந்தாலும் டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கிறது. கதையும், திரைக்கதையும் அற்புதமாக உள்ளது. கௌதம் மேனனின் தரமான கம்பேக் இது என பலரும் படத்தை பாராட்டுகிண்றனர்.

3 இயக்குநர்களை உதவிக்கு அழைத்த சங்கர் ! மாஸாக ரெடியாகும் இந்தியன் 2 படம் !

simbu 1

சிம்பு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதால் இந்த படமும் சிம்புவிற்கு பிளாக் பஸ்டர் ஹிட் தான் என்பதை உறுதியாக கூறலாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment