சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிறந்த நாளில் பெரும்பாலும் தன்னை பார்க்க ரசிகர்களை வீட்டிற்கு வர வேண்டாம் என்றும், தான் ஊரில் இல்லை என்றும் தெரிவிப்பார். அதே பாணியில் சிம்புவும் வரும் 3ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளின்போது ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும்… என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது. உங்கள் பேரன்பு. அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து, உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம். கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள்.
உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன்.
என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. “அதனால் நண்பர்கள் யாரும் என் பிறத்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம்.ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று “மாநாடு” டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்.
அனைவருக்கும் அன்பும்… நன்றியும்.
இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுளார்
Official Press / Media release. #SilambarasanTR #Atman God bless. Spread love. pic.twitter.com/sBmujfXviG
— Silambarasan TR (@SilambarasanTR_) January 29, 2021