Connect with us

ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிறாரா சிம்பு? பரபரப்பு தகவல்!

simbu vote1

Entertainment

ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிறாரா சிம்பு? பரபரப்பு தகவல்!

ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுகிறாரா சிம்பு? பரபரப்பு தகவல்!

அரசியல் கட்சியில் இருப்பது போல் தனது ரசிகர் மன்றத்தில் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி, இலக்கிய அணி என உருவாக்கியிருப்பதாக சிம்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர்கள் அரசியலுக்கு வருவது சர்வ சாதாரணமாகி வருகிறது. அந்த வகையில் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்புவும் அரசியலுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு திடீரென சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

simbu voe3மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்! நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்.

மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும்

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top