டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு! இனிமே என் மகன் சிம்பு கிடையாது; டாக்டர் சிம்பு: டி.ஆர்

பன்முக கலைஞர் நடிகர் இசையமைப்பாளர் என்ற அனைத்து திறமைகளும் கொண்டவர்தான் நடிகர் டி.ராஜேந்திரன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதுபோல இவரின் மகனும் இத்தகைய திறமைகள் கொண்ட நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருகிறார்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிலம்பரசன் தான். நடிகர் சிலம்பரசன் ஏகப்பட்ட திறமைகள் இருந்தாலும் அவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். என்னதான் இவர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டாலும் அவரின் இத்தகைய வெற்றிக்கு அவருக்கு பக்கபலமாக சமீபத்தில் சிம்புவின் ரசிகர்கள் தான்.

இந்த சூழலில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் அவருக்கு கம் பேக் அமைந்துள்ளது. மாநாடு படத்திற்கு பின்பு நடிகர் சிம்பு பிசியாக காணப்படுகிறார். இந்த சூழ்நிலையில் வேல்ஸ் யுனிவர்சிட்டி சார்பாக நடிகர் சிலம்பரசனுக்கு என்று டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தன் அப்பா அம்மாவுக்கு டெடிகேட் பண்ணி உருக்கமாக கூறியுள்ளார். அதன்படி இந்த டாக்டர் பட்டத்திற்கு முழு காரணம் என் அப்பா அம்மாதான் என்று நடிகர் சிலம்பரசன் கூறினார். மகன் டாக்டர் பட்டத்தை வாங்குவதை நேரில் கண்ட டி.ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி சிம்புவிற்கு ஆனந்தத்தோடு முத்தமழையை கொடுத்தனர். அதோடு நடிகர் டி.ஆர், என் மகன் இனிமேல் சிம்பு கிடையாது டாக்டர் சிம்பு  என்று தனது பாணியில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment