
பொழுதுபோக்கு
‘கேஜிஎஃப்’ தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்க தயாராகும் சிம்பு? இயக்குனர் யாரு தெரியுமா?
சிம்பு தற்போது கவுதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் ‘பாத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.இந்த படம் விரைவில் முடிவடைந்து டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘சிம்புவின் வெந்து தனிந்து காடு’ திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதற்கு அடுத்ததாக சிம்பு ,சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து பல்வேறு விருதுகளையும் பெற்றது.
அதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் அக்ஷய்குமார் ஹீரோவாக வைத்து அதே படத்தை தயாரித்து வருகிறது. இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். ஹிந்தி ரீமேக்கிலும் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
அதற்கு அடுத்ததாக கே ஜி எஃப் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சுதா கொங்கரா ஒரு படம் இயக்குவதாக உறுதியானது. இந்த படத்தில் சூர்யாதான் நடிக்க போவதாக அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் சிம்பு தான் படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியானது.
இந்நிலையில் சிம்புவிற்கு சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை தற்போழுது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ‘கேஜிஎஃப்’ 1, ‘கேஜிஎஃப் 2’ புகழ் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்து உலக அளவில் பெரும் வெற்றியை அடைந்ததை அடுத்து அவர்களில் அடுத்த படமும் பெரிய வெற்றியை பொறுத்தே அமையும் என்பது உறுதி.
திருமணத்திற்கு ரெடியான பாவனி – அமீர் ஜோடி! எப்போது கெட்டி மேளம் தெரியுமா?
பெரிய நிறுவனத்தின் படம் என்பதாலும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கும் படம் என்பதால் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார், மேலும் இந்த படத்திற்கு பிறகு சிம்புவின் லெவல் பெரிதாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
