நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் பல தடைகளை சந்தித்தது. ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் இருந்து பல்வேறு தடைகளை சந்தித்தது.
முதலில் சிம்பு நடிக்க வரவில்லை அதனால் நிறைய பிரச்சினைகள் எழுந்தது பின்பு ஒரு வழியாக பஞ்சாயத்துகள் பேசப்பட்டு சிம்பு நடிக்க வந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு தடைபட்டு ஒரு வழியாக படப்பிடிப்பு நடந்து தீபாவளிக்கு படம் வெளியாக இருந்த நிலையில் அதுவும் தடைபட்டது. ரஜினியின் அண்ணாத்தே படம் வெளியானதால் இந்த படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் சிம்புவின் மாநாடு படத்தை பாராட்டி அவரது ரசிகர்கள் நடத்தும் மாநாடு கொஞ்சம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 6ம் தேதி நடக்க இருக்கும் சிம்பு படத்தின் ரசிகர்கள் மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
— ValaiPechu Anthanan (@Anthanan_Offl) January 2, 2022