தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கிய மாநாடு: உண்மையான காரணம் இதுதான்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படம் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்
இதற்கு தீபாவளி அன்று அண்ணாத்தை உள்பட ஒருசில படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோலிவுட்டில் கூறப்பட்டது. ஆனால் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் வேறு என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்பட ஒருசில படங்கள் பெரும் நஷ்டம் அடைந்ததை அடுத்து அவரது படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்ட ஈடு கேட்டு வருகின்றனர். அவர்களால்தான் மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமாகி இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

ஒருவேளை பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற வில்லை என்றால் நவம்பர் 27ஆம் தேதியும் மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment