தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சிம்பு, தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர், அவரின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்க்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்,மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படம்.இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அதை தொடர்ந்து சுதா கொங்காரா படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வந்தது. அடுத்ததாக கமலுடன் சிம்பு இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாஸாக களமிறங்கிய கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பா முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதிலும் தீவிரம் கட்டி வருகிறார்.ராஜ் கமல்நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தை சிவகார்த்திகேயன் நடிக்கிறார் , கமலஹாசன், 52 வது படத்தில் தானே நடிக்கிறார். அந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார்.
கோடிகளில் புரளும் ராஷ்மிகா மந்தனா! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
அதையடுத்து 54 வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக கமல்ஹாசனே ஒரு மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸின் 53வது படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.