தமிழ் சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு , அவர் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம்.
இந்தப்படத்திற்க்காக சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்ளின் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது அதிகரித்துள்ள நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
அதே நாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படமும் படமும் செப்டம்பர் 15 அன்று உலகளாவிய அளவில் திரைக்கு வர இருக்கிறது.
ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், இரண்டாம் முறையாக ஜெயம் ரவி இணைந்து பிரியா பவானி சங்கள், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’
சமீபத்தில் வெளியான படத்தின் டீசரில் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காவல்துறையின் சேஸிங் காட்சிகளுடன் உள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
அதே நாளில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் லத்தி, ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். போலீஸ் கதைக்களத்தில் மையமாக படம் அமைந்துள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகிறது, இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 15ம் தேதிக்கு வெளியீட்டை தள்ளிவைத்துள்ளனர்.
அதற்கு காரணம் விஷால் தான் கிளைமாக்ஸ் சண்டைகாட்சிகள் படமாக்கியபோது எதிர்பாராத விதமாக விஷால் காலில் நிஜமாகவே அடி விழுந்து விட தற்போது விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீண்டும் ஒரு ரவுடி பேபியா? சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி முன்னணி நடிகர்களான சிம்பு ,ஜெயம்ரவி ,விஷால் படங்கள் மோதவுள்ளது. இந்த மோதல் ரசிகர்களுக்கு கொண்டாடடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.