சிம்பு இப்படிப்பட்ட மனிதர் தான்… மிர்ச்சி சிவா பேச்சு…

சிவா ராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்டவர் மிர்ச்சி சிவா. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் ரேடியோ மிர்ச்சியில் வானொலி அறிவிப்பாளராக பணிபுரிந்தார். அதனால் தன் பெயரை மிர்ச்சி சிவா என்றே வைத்துக்கொண்டார்.

ஷியாம், ஜோதிகா நடித்த 12பி திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த மிர்ச்சி சிவா 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அடுத்து மறுபடியும் வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்விரு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

அடுத்து ‘தமிழ்ப்படம்’, ‘கோ’ திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் 2012 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய ‘கலகலப்பு’ திரைப்படத்தில் நடிகர் விமலுடன் இணைந்து நடித்திருந்தார் மிர்ச்சி சிவா. நகைச்சுவை திரைப்படமான ‘கலகலப்பு’ நல்ல விமர்சனங்களைப் பெற்று வணீக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

அதற்குப் பின்பு தில்லு முல்லு (2013), சொன்னா புரியாது (2013), வணக்கம் சென்னை (2013), மசாலா படம் (2015), சென்னை 600028 பாகம் 2 (2016), கலகலப்பு 2 (2017)போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் மிர்ச்சி சிவா. யதார்த்தமான நடிப்பிற்காகவும், வெள்ளந்தியான முகத்திற்காகவும், தனித்துவமான நகைச்சுவைக்காகவும் ரசிகர்களை கொண்டவர் மிர்ச்சி சிவா.

இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவை பற்றி பேசியுள்ளார் மிர்ச்சி சிவா. அவர் கூறியது என்னவென்றால், சிம்பு மல்டி டேலண்ட்டட் பெர்சன். அவரைப் பற்றி வெளியே பேசுறது, வதந்திகள் எல்லாம் உண்மை இல்லை. நிஜத்துல அவர் ரொம்ப நல்ல மனுஷன். அவரிடம் பழகினவங்களுக்கு அது தெரியும் என்று கூறியுள்ளார் மிர்ச்சி சிவா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...