சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ தகவல்!

சிம்பு நடித்து வந்த ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் 2023ம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா, ஜோதிகா, பூமிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் சிம்புவுக்கு அடுத்த வெற்றி படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.