தீபாவளி ரேஸில் இருந்து ஒதுங்கிய ‘மாநாடு’: புதிய ரிலீஸ் தேதி இதுதான்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

இதனை அடுத்து தீபாவளி ரேஸில் இருந்து சிம்புவின் ‘மாநாடு’ படம் விலகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திரை உலகிற்கும் திரைப்பட ரசிகர்களுக்கு வணக்கம். நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கு இடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்து விட அனைத்தும் செய்யப்பட்டு செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல, ஒரு விழா நாளில் மக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவு எடுத்தோம். போட்டி என்ற வீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அப்படிப் பார்ப்பது வியாபார புத்திசாலித்தனம் அல்ல. நமது ’மாநாடு’ படம் நன்றாக வந்துள்ளது. அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது, வந்து பார்ப்போம் என இறங்கி விடலாம்.

ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும் திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும், நாட்டம் அடைய கூடாது என்று சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும். ஆதலால் ’மாநாடு’ தீபாவளிக்கு வெளிவராமல் சற்றுத்தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும். ’மாநாடு’ தீபாவளி வெளியீட்டில் வெளியேறுகிறது. வெளியாகும் படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்க போகும் உங்கள் அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்

இதேபோல் தீபாவளி ரிலீஸ் திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் ’எனிமி’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? அல்லது ’மாநாடு’ போல் பின்வாங்குமா? ‘அண்ணாத்த’ சோலோவாக ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print