ரிலீஸ் ஆனது ‘மாநாடு’ திரைப்படம்: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி சற்றுமுன் ரிலீசாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்துடன் படம் பார்த்து வருகின்றனர்.

சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு அதன் பின் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ‘மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் என்று உறுதி என்று கூறப்பட்டது

‘மாநாடு’ திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவிக்காக உதயநிதி ஸ்டாலின் மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியதாகவும், அதன் காரணமாக இந்த படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு முதல் காட்சி சென்னையில் தொடங்கி விட்டதாகவும் ரசிகர்கள் தற்போது படத்தை பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

‘மாநாடு’ பிரச்சினையை தீர்த்து அனைவருக்கும் தனது நன்றியை என ஏற்கனவே தயாரிப்பாலர் சுரேஷ் காமாட்சி டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment