’மாநாடு’ ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் அறிவித்ததால் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் இந்த படத்தை திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என நேற்று விடிய விடிய பேச்சுவார்த்தை நடப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக இன்று திட்டமிட்டபடி இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இருப்பினும் இன்று அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் இன்று எட்டு மணி காட்சி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ட்வீட்டில் அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து விட்டதால் ’மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீசாக இருப்பதாகவும் கடவுள் அருளால் இந்த பிரச்சனையை தீர்க்க உதவிய அனைவருக்கும் தனது நன்றியை என்றும் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ’மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீசாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் இன்று காலை 8 மணி முதல் படம் ரிலீசாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment