சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் நாளை ரிலீஸ் இல்லை: அதிர்ச்சி அறிவிப்பு!

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் நாளை ரிலீசாக இருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாளை ரிலீஸ் இல்லை என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதும், இந்த படத்திற்கு முன்பதிவுகள் நடந்தது என்பதும் நாளை இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் ‘மாநாடு’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயவாத காரணங்களால் ’மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment