’மாநாடு’ படத்தின் இரண்டு நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 8 கோடி என்று கூறப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் வசூல் 15 கோடியை தாண்டி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் 14 கோடி என அறிவித்துள்ளார். ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரே இந்த தகவலை அறிவித்துள்ளதால் இந்த வசூல் அதிகாரபூர்வமான தகவல் என்றும் உறுதியாகின்றது.

’மாநாடு’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் 14 கோடி என்ற நிலையில் இந்த படம் நிச்சயம் 100 கோடி வசூலை எட்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment