வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் வெளியிட்ட சிம்பு!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

pic 18

வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு ஐந்து தோற்றங்களில் நடிப்பதாக தெரிந்ததில் இருந்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

newproject 2022 07 29t201455 473 1659105990

இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளியன்று, சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெந்து தனித்து காடு படத்திற்கு டப்பிங் பேசி முடித்ததாக அப்டேட் செய்தார்.

https://www.instagram.com/silambarasantrofficial/?utm_source=ig_embed&ig_rid=5d2421a4-fc42-4027-a22d-a429e0e4cd28

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து உதயநிதி வெளியிட்ட மெர்சல் ட்வீட்!

படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment