நடிகர் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடித்துள்ள ‘மஹா’ படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை கைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.
பல வருடங்களாக ஒற்றை வெற்றிக்கு போராடி வந்த சிம்புக்குவுக்கு, கடந்த வாரம் வெளியான ‘மாநாடு’ படம் சிறந்த கம் பேக் மூவியாக அமைந்தது. இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் ஓவர் உட்சாகத்தில் உள்ளனர். படம் வெளியான இரண்டாவது நாளே சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கேக் வெற்றி ‘மாநாடு’ படத்தின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். சிம்புவுக்கு சமமான வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்த எஸ்.ஜே.சூர்யாவும் பல பேட்டிகளில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
ஹன்சிகா கேட்டுக்கொண்டதற்காக சிம்பு ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதேசமயத்தில் ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது அதில் ஹன்சிகா மீது படுத்து சிம்பு குட்டி தூக்கம் போடுவது போன்று சிம்பு போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படம் செம்ம வைரலானதை தொடர்ந்து, அடுத்தடுத்து… சிம்புவுடன் ஹன்சிகா ரொமான்ஸ் செய்யும் சில படங்கள் வெளியானது.
அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ளனர். இது ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் உருவாகி 2 வருடமான நிலையில், ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில பிரச்சினைகளால் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் வரும் 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
வரும் ஜூன் 10-ம் தேதி தியேட்டரில் இந்தப் படம் வெளியாகும் என்று, படத்தை வெளியிடும் ஸ்டூடியோ 9 சுரேஷ், தெரிவித்துள்ளார். இரண்டு வருடத்துக்குப் பிறகு சிம்பு நடித்துள்ள மஹா படம் ரிலீஸ் ஆவதால், அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.