மீண்டும் மோதலுக்கு தயாரான சிம்பு – தனுஷ்!! எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் கௌதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. நேற்று முன் தினம் இந்த படம் வெளியான நிலையில் அதிக வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு பேட்டி ஒன்றில் நான் ஹாலிவுட்டி என்ட்ரி கொடுத்திருந்தால், ஹாலிவுட்டி கதாநாயகனாக இருந்து இருப்பேன் என கூறிய அவர் பின் அடுத்து என்ன? என்ற ஒரு கேள்வியை முன் வைத்தார்.

அதோடு இப்போது இருக்கும் நடிகர்கள் பலரும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் வகையில் ஒடிக்கொண்டு இருப்பதாகவும், தன்னுடைய வேலையை சிறப்பாக செய்தாலே உயர்ந்து விடலாம் என கூறியுள்ளார்.

இதனை கேட்ட தனுஷ் ரசிகர்கள், நடிகர் சிம்பு தனுஷை தான் சீண்டி பேசியுள்ளதாக சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment