Connect with us

அடேங்கப்பா.. ஆளே மாறிப்போன சிம்பு…. இத்தனை விஷயம் செய்கிறாரா? என்னது அரசியல்!!!

Entertainment

அடேங்கப்பா.. ஆளே மாறிப்போன சிம்பு…. இத்தனை விஷயம் செய்கிறாரா? என்னது அரசியல்!!!

27970baf2588d34bb0b644e21bb38bf1

தன் புகைப்படங்கள், வீடியோக்கள், பட அப்டேட்டுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

புது ஆளாக மாறிய பிறகு கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 14ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. சிம்பு, சுசீந்திரன் மீண்டும் கூட்டணி சேரும் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படி படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு, டிரஸ்ட் ஆரம்பித்து ஏழைகளுக்கு நிதியுதவி செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும் தன் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்களை அவ்வப்போது சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண தீர்மானித்துள்ளாராம் சிம்பு.

டிரஸ்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் இந்த முடிவு குறித்து அறிந்தவர்கள், என்ன அரசியலுக்கு வரப் போகிறாரா, அதற்கு முன்னோட்டமாக இதை எல்லாம் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top