Connect with us

தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் சிம்பு…. எல்லாம் மாநாடு படம் கொடுத்த தெம்பு தான்….!

vijay simbu 1

பொழுதுபோக்கு

தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் சிம்பு…. எல்லாம் மாநாடு படம் கொடுத்த தெம்பு தான்….!

தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யுடன் மோதும் சிம்பு…. எல்லாம் மாநாடு படம் கொடுத்த தெம்பு தான்….!

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கி வந்த நடிகர் சிம்பு உடல் எடை அதிகரித்து பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார். இதனையடுத்து பஞ்சாயத்துகளை முடித்து விட்டு கடந்தாண்டில் யாரும் எதிர்பாராத விதமாக கம்பேக் கொடுத்து மாநாடு என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

maanadu

சிம்புவின் திரை வரலாற்றிலேயே முதன் முறையாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது மாநாடு படம் தான். இதனை தொடர்ந்து தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கெளதம் மேனன் இயக்க வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

வெந்து தணிந்தது காடு

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சி ஒன்றிற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.

பீஸ்ட்

ஏற்கனவே சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படமும் ஏப்ரல் மாதம் தான் வெளியாக உள்ளது. இதுதவிர கேஜிஎப் 2 மற்றும் அமீர்கானின் லால் சிங் சட்டா ஆகிய படங்களும் ஏப்ரல் மாதத்தில் தான் வெளியாக உள்ளன. இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படமும் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை விஜய் மற்றும் சிம்பு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி விஜய் மற்றும் சிம்புவின் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி – போடா போடி, மாஸ்டர் – ஈஸ்வரன் ஆகிய படங்கள் ஒரு நாளில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பீஸ்ட் – வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மோத உள்ளன.

இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் அதிரி புதிரி வெற்றி பெற்றதால் அந்த தைரியத்தில் தான் சிம்பு இந்த முடிவெடுத்துள்ளார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top