Connect with us

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுதானாம்….!

வெந்து தணிந்தது காடு

பொழுதுபோக்கு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுதானாம்….!

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவின் கேரக்டர் இதுதானாம்….!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்தடுத்து நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படம். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக படத்தின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் மீதான ஆவலை அதிகரிக்க செய்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. காரணம் அந்த புகைப்படங்களில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா சிறுவன் முதல் முதியவர் வரை பல தோற்றங்களில் நடித்திருப்பார். இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திலும் சிம்பு அதேபோல் ஐந்து தோற்றங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படத்துடன் மோத உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தில் சிம்பு ஐந்து தோற்றங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலால் இரண்டு படங்களுக்கும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top