Entertainment
சிம்புவின் தம்பி குறளரசன் திருமணம்
இயக்குனர், நடிகர், வசனகர்த்தா,பாடலாசிரியர் தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரான டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. இவர் 2000ல் நடிக்க வந்து இதுவரை பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டார்.

நடுவில், நயன் தாரா, ஹன்சிகா போன்றோருடன் காதல் முறிவும் ஏற்பட்டது. இவர் திருமணம் எதுவும் இதுவரை செய்து கொள்ளவில்லை.
இருப்பினும் இவர் தம்பியான குறளரசனும் தான் சார்ந்த மதத்தை விட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.

சமீபத்தில்தான் இதற்கான மதச்சடங்கு நடந்தது.
இந்நிலையில் குறளரசனின் திருமணம் நேற்று நடந்து முடிந்தது. மிகவும் எளிமையான வகையில் திருமணம் நடந்து முடிந்தது. தம்பி திருமணத்தில் அண்ணன் இல்லாமல் எப்படி? சிம்பு திருமணத்தை கலைக்கட்ட செய்துள்ளார்.
தம்பி திருமணத்தில் சிம்பு வேட்டி சட்டையில் ஸ்டைலாக காணப்படுகிறார்.
குறளரசன், சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றினார்.
