Connect with us

ஆடியோ வெளியீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்த சிம்பு.. கெத்து காட்டும் வீடியோ !

709605

பொழுதுபோக்கு

ஆடியோ வெளியீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்த சிம்பு.. கெத்து காட்டும் வீடியோ !

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறை இணைந்து நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.

இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

Senthil

இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

8cb5187faa968701463ec9b8f10a23461662123424879224 original

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

‘டான்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் செய்த மொத்த வசூல் தெரியுமா?

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் பங்கேற்கின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top