திரையுலகை பொருத்தவரை இரண்டு பெரிய நடிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொள்கிறார்களோ இல்லையோ அவர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவில் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் ஒரு கலவரத்தையே நடத்தி வருகிறார்களாம்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள அந்த பிரம்மாண்ட படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் சங்க நடிகர் குறித்து பிரம்மாண்ட படத்தின் இயக்குனரும், நடிகர்களும் பாராட்டி தள்ளி விட்டார்கள்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படத்தை விட சங்க நடிகருக்கு தான் அதிக புரமோஷன் கிடைத்தது என்று கூற வேண்டும். மேலும் தற்போது சங்க நடிகர் அக்கட தேச படத்தில் நடிக்க உள்ளதால் இந்த சம்பவத்தால் சங்க நடிகரின் மாஸ் இன்னும் அதிகரித்து விட்டதாம். இதனால் அக்கட மொழியில் உருவாக உள்ள நடிகரின் புதிய படத்திற்கு நலல் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சங்க நடிகருக்கு கிடைத்த இந்த புகழ் ஒல்லி நடிகருக்கு பிடிக்கவில்லையாம். தனக்கு பிறகு திரையுலகில் நுழைந்த அவர் எப்படி இவ்வளவு பிரபலமாகலாம் என பயங்கர கோபமடைந்து விட்டராம். தான் பார்த்து வளர்த்து விட்ட நடிகர் தற்போது தன்னை ஓவர் டேக் செய்வதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஒல்லி நடிகரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சங்க நடிகரை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். இதனால் கடுப்பான சங்க நடிகரின் ரசிகர்கள் எதிர் கருத்துக்களை தெரிவிக்க தற்போது இருதரப்பு நடிகர்களின் மோதலால் சமூக வலைத்தளமே கலவரமாகி உள்ளது. என்ன கொடுமை சார் இது…..