சென்னை, ஆலந்தூரில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் மெட்ரோ அருகே வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. குறிப்பாக அதிவேகமாக வந்த மாநகர பேருந்து அங்கிருந்த பெயர் பலகையின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பெயர் பலகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதோடு அரசு பேருந்து ஓட்டுநர் ரகுநாத், நடத்துநர் சின்னையன் தப்பி சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இருப்பினும் சில மணி நேரத்திற்கு பிறகு தப்பி சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ரகுநாத், நடத்துநர் சின்னையன் ஆகியோர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த விபத்தினால் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சூழலில் தற்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன் படி, ரூ.3 லட்சம் நிவாரணம் வழக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.