சமீபத்தில் கர்ணன் படத்தில் வந்த உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை சித் ஸ்ரீராம் கர்நாடிக் ராகத்தில் பாடி இருந்தார் . இது பலத்த விமர்சனத்துக்குள்ளானது.
அவர் சீர்காழி கோவிந்தராஜன் பாடி இருந்த பாடலின் தன்மையை கெடுக்கிறது அந்த ஃபீல் இல்லை சித் ஸ்ரீராம் பாடலை கெடுக்கிறார் என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் மகன் பாடகர் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், அந்த பாடல் என் தந்தை பாடியபோது எனக்கு வயது 5.
அவர் போல பாட முடியாது . ஆனால் சித் ஸ்ரீராம் பாடியதில் தவறில்லை.
எனக்கு வெறும் காபி மட்டும் கொடுங்கள் கண்டதை போட்டு காப்பியே மறந்து போச்சு என்று சொல்லும் நபர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல சிலர் மாற்றியும் காப்பி கேட்டுக் கொள்கிறார்கள். சித் ஸ்ரீராம் பாடியதை ஒரு மசாலா காபி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கதை என்று சொன்னால் அது அவர்களின் சுதந்திரம். அவர் பாடியதை நான் இரண்டு வரிகள் தான் கேட்டேன்.
ஆனால் என்னை அந்த பாட்டை மாற்றிப் பாட சொன்னால் நான் பாட மாட்டேன் என்றும் அப்பா போட்ட கோட்டில் நிற்பவன் நான் அவர் அளவிற்கு யாரும் பாட முடியாது என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார்.