அடுத்தடுத்த சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் சித்தார்த்! டிஜிபியிடம் கடிதம் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்;

இந்த சினிமா உலகில் ஆடிப்பாடி தனது திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு பல ஆண்டுகள் கடின உழைப்பு தேவைப்படும். அவ்வாறு உழைத்து இன்று மக்களிடையே மிகப்பெரிய நட்சத்திரங்களாக ஏகப்பட்ட ஜொலித்துக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அவர்கள் என்னதான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து மேலே ஜொலித்தாலும் அவர்கள் கூறும் ஒரு சில வார்த்தைகள் அவர்களின் நிலையை புரட்டிப் போட வைக்கும் அளவிற்கு மாற்றி விடும். அதோடு அவர்கள் மீது ஒரு கருப்பு புள்ளி போலவே அந்த கருத்து அவர்களுக்கு அமையும். அவ்வாறு தான் தற்போது தமிழகத்தில் இளம் நடிகரான சித்தார்த் அமைந்துள்ளார்.

சித்தார்த் பாய்ஸ் போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் சில நாட்களுக்கு முன்பு கூறிய கருத்து அவரின் மீது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதன்படி அவர் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் கூறிய கருத்து சினிமாவுலகில் தீப்பொறியாக பரவிக்கொண்டு வருகிறது.

இதற்கு தமிழகத்தின் பிரபல நடிகை கஸ்தூரி கருத்து கூறியிருந்தார். இத்தகைய சூழலில் மீது மேலும் ஒரு புகார் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஏனென்றால் நடிகர் சித்தார்த் தனியார் டிவி பெண் ஊழியரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதி விட்டதாக அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி  தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment