நாடகம் ஆடிய சித்தார்த்.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புது சர்ச்சைகளை உருவாக்கும் நடிகராகவே இருந்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினத்தில் மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை ஹிந்தியில் பேச சொல்லி அதிகாரிகள் காத்திருக்க வைத்ததாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் விமான நிலையத்தில் சித்தார்த் பெற்றோரை சோதனை நடத்தியப்போது பாதுக்காப்பு வீரர் பெண் என தெரிகிறது.

அதாவது தஞ்சாவூரை சேர்ந்த குடும்பத்தினரின் உடைமைகளை அடிக்கடி சோதனை செய்ததால் சித்தார்த்தின் குடும்பத்தினர் அந்த பெண்னிடன் கடுமையாக நடந்து கொண்டதாக தெரிகிறது. அதே போல் அவரை காத்திருக்கம் வைக்கவில்லை விமானதுறை அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

இந்த சூழலில் நடிகர் சித்தார்த் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோரை சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இந்தியில் பேசக்கூறியதாக நடிகர் சித்தார்த் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

இத்தகைய பதிவானது மொழி பிரச்சனையை தூண்டும் வகையில் இருப்பதால் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அர்ஜூன் சம்பத் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.