சித்தா, ஆயுர்வேத கல்லூரி கலந்தாய்வு இன்று தொடக்கம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு

ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க இருப்பதை அடுத்து இந்த கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழக அரசின் அறிஞர் அண்ணா இந்திய அரசு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரியில் சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய ஆகிய படிப்புகளுக்கு 2022 – 23 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்லூரிகளில் மொத்தம் 89 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை இந்தப் படிப்புகளுக்கு 427 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.