Connect with us

கமலை தொடர்ந்து இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்!

11

பொழுதுபோக்கு

கமலை தொடர்ந்து இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சிபிராஜ்!

இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவான திரைப்படம் மாயோன்.

இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார் .இசைஞானி இளையராஜா இசையில் இந்த திரைப்படம் வெளியாகி படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

1500x900 740955 mayon

கடந்த வாரம் வெளியான இந்த படத்தில் எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி ‘யு’ சான்றிதழை வழங்கி பாராட்டியுள்ளனர்.ஆன்மிகத்தையும் அறிவியலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

ஒரு தொல்லியல் குழு கோவிலில் உள்ள அமானுசத்தை மீறி கோவிலில் உள்ள புதையலை எப்படி மீட்டு கொண்டு வருகிறது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

மேலும் பல வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஆன்மீகத்தை சார்ந்த ஒரு ஆராய்ச்சி திரைப்படம் வெளியாகி இருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து ‛மாயோன் 2′ உருவாகும் என அறிவித்துள்ளனர்.

 

MAYON 1

முதல்பாகத்தில் இருந்த கூட்டணியே இரண்டாம் பாகத்திலும் தொடரம் என்றும், முதல்பாகத்தில் கிருஷ்ணர் கோவிலை மையமாக வைத்து படம் உருவானது . இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர்.

இந்த படம் வருகிற 7ம் தேதியன்று தெலுங்கில் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்! வெளியானது ‘பத்தல பத்தல’ வீடீயோ பாடல் !

மேலும் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் கிஷோருக்கு படத்தின் ஹீரோ சிபிராஜ் தங்கசங்கிலி பரிசளித்து வெறுமை படுத்தியுள்ளார். முன்னதாக விகாரம் படத்தின் வெற்றிக்காக கமல் இயக்குனருக்கு 80 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top