ஸ்வேதா மோகனின் ‘பெண் ஆந்தம்’… மகளிர் தின ஸ்பெஷல்… வெளியிட்டது யார் தெரியுமா…?

பின்னணி பாடகி சுஜாதாவின் மகள் ஸ்வேதா மோகன். இவரும் பிரபலமான பின்னணி பாடகி ஆவார். இவர் 50 படங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் பாடியுள்ளார்.

சிறந்த பாடகிக்கான விருதுகளை தமிழ்நாடு மற்றும் கேரள அரசிடம் இருந்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக நம் அனைவருக்கும் பரிச்சயமானவர். இறுதியாக தனுஷ் நடித்த ‘வாத்தி ‘ படத்தில் இவர் பாடிய ‘வா வாத்தி’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

இதையடுத்து, ஸ்வேதா மோகன் வருகிற மார்ச் 8 ஆம் தேதி நிகழவிருக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண் ஆந்தம்’ என்ற புதிய பாடலை அவரே இசையமைத்து, பாடியும் உள்ளார். ஷரோன் கே. விபின் இப்பாடலை இயக்கியுள்ளார் மற்றும் பாடல் வரிகளை கிருத்திகா நெல்சன் எழுதியுள்ளார்.

பெண்களின் சிறப்பை போற்றும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. இது பெண்மையின் கொண்டாட்டம், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பு பற்றிய புரிதல், பெண் குழந்தைகளின் மகத்துவம், அன்றாடம் வாழ்வில் போராடி ஜெயிக்கும் பெண்களின் வலிமையை ஊக்குவித்தல், ‘பெண்களின் ஆரோக்கியமே தேசத்தின் செல்வம்’ என்ற மந்திரத்தை உள்ளடக்கிய இப்பாடல், பெண்களின் உடல், மனம், உணர்ச்சி ஆரோக்கியம், குறிப்பாக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

மேலும், இப்பாடலை சிறப்பிக்கும் விதமாக நடிகர் தனுஷ் அவர்கள் முதலாக ‘பெண் ஆந்தம்’ பாடலை தனது X தளத்தில் வெளியிட்டார். இந்த மகளிர் தினத்தில் ‘பெண் சக்தி’ யை போற்றவேண்டும். அதற்கு இந்த பாடல் சமர்ப்பணமாக இருக்கும். இந்த பாடலை தயாரித்த குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...