Connect with us

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி;;

129572 shasan

பொழுதுபோக்கு

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி;;

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் 3. 7-ம் அறிவு, புலி,பூஜை, சிங்கம் மற்றும் வேதாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

இந்நிலையில் தனது காதலன் சாந்தனுவுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரும் சுருதிஹாசன் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த சூழலில் நடிகை ஸ்ருதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சனை உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் ஹார்மோன் பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

தனது ஹார்மோன் பிரச்சனையை சிலர் தவறாக விமர்சிப்பதாக ஸ்ருதி கூறியுள்ளார். அதோடு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

தான் நலமாக இருப்பதாக கூறிய ஸ்ருதி பெண்கள் பலருக்கு இந்த ஹார்மோன் பிரச்சினை ஏற்படுவதாகவும் இதனைப் பற்றி வெளிப்படையாக கூற வேண்டும் என்று சமூக நோக்கத்துடன் அந்த வீடியோவை பகிர்ந்ததாக கூறியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top