ஷ்ரத்தா கொலை வழக்கு… போலீசார் புதிய தகவல்!!

டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி வீசிய விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் புதிய தகவலை தெரித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணி புரிந்த நிலையில் ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை.. நாளை மீண்டும் திறப்பு..!!

இந்நிலையில் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிகழவே டெல்லியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் அஃப்தப் மதுபழக்கம் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் காதலி கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் மோதல் நிலவியது.

இந்த சூழலில் ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கவே கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தப் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் 35 துண்டுகளாக வெட்டி பல பகுதிகளில் வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

எமனாக மாறிய லாரியின் கயிறு… தூத்துக்குடியில் பயங்கரம்..!!!

இதற்கிடையில் நீண்டநாட்களாக மகளின் செல்போன் சுவிச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த ஷ்ரத்தாவின் தந்தை டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து அஃப்தப் வீட்டருகே இருந்து 13 எலும்புகளை கண்டெடுத்தனர். தற்போது மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட சில எலும்பு மாதிரிகள் ஷ்ரத்தாவின் தந்தையின்
டிஎன்ஏ உடன் ஒத்துப்போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.