Connect with us

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்றவேண்டுமா? கோரிக்கை நிராகரிப்பு!!

முல்லை பெரியாறு அணை

Tamil Nadu

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்றவேண்டுமா? கோரிக்கை நிராகரிப்பு!!

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்றவேண்டுமா? கோரிக்கை நிராகரிப்பு!!

தமிழகமும் கேரளாவும் அண்டை அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி நட்பு மாநிலங்களாக காணப்படுகிறது. இருப்பினும் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் ஒரு பிரச்சனை என்றால் அதனை முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என்றே கூறலாம்.

இந்த அணை விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்காக காணப்படுகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மாறி மாறி ஒவ்வொரு அரசும் பல்வேறு விதமான கோரிக்கைகளை முன்வைத்து கொண்டு வருகிறது.

அதுவும் தற்போது கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்ற வேண்டும் என்று கேரளா அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவரை நியமித்தால் குழுவின் விவரங்களை அறிந்துகொள்ள கால தாமதமாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கான முன்னுரிமை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. புதிய அணை கோரிக்கை தொடர்பாக பின்னர் விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top