நிதி நெருக்கடி காரணம் காட்டி அம்மா உணவகத்தை நீர்த்துப் போக செய்யக்கூடாது!!!

எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தியது.அவற்றில் ஏழைகளின் பசி போக்கும் மிகப்பெரிய திட்டமாக காணப்பட்டது அம்மா உணவகம் தற்போதும் நடைமுறையில் உள்ளன.ஓபிஎஸ்

இந்த நிலையில் இன்று காலையில் அம்மா உணவகத்தை ஆரோக்கியமாக செயல்படுத்த வேண்டுமென்று கமலஹாசன் கூறினார். அவரை தொடர்ந்து தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அம்மா உணவகம் பற்றி கூறியுள்ளார்.

அதன்படி அம்மா உணவகத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அம்மா உணவகத்தை நீர்த்துப்போக செய்ய கூடாது என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய கடமையும், பொறுமையும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஏழை ,எளிய மக்களின் பசியைப் போக்கும் அம்மா உணவகத்தை முதல்வர் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

இவ்வாறு அடுத்தடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அம்மா உணவகத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment