கோவில் விருந்தில் துப்பாக்கிச்சூடு… அலறி ஓடிய பக்தர்கள்!!

மதுரை திருமங்கலம் கோயிலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள காட்டுபத்திரகாளி அம்மன் கோயிலில் விருந்து நடைப்பெற்று இருந்தது. அப்போது விருந்திற்கு வந்த உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர் கனமழை! குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு..!!

குறிப்பாக 2 பேர் மதுபோதையில் இருந்ததாகவும், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மற்றொருவரை சுட முயன்றுள்ளார்.

இதில் அதிஷ்டவசமாக கணபதி என்பவர் உயிர்பிழைத்துள்ளார். இந்நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அடுத்த 3 மணி நேரம்.. 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!

விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment