Connect with us

அண்டை மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.!! தமிழ்நாட்டில் எப்ப வேணா நடக்குமோ?

petrol diesel 1200

செய்திகள்

அண்டை மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.!! தமிழ்நாட்டில் எப்ப வேணா நடக்குமோ?

பெட்ரோல் டீசல் விலை உயர்வானது இந்தியா முழுவதும் அதிகமாக காணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பின்பு பெட்ரோல், டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியா சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு வரிசையாக பெட்ரோல் மற்றும் டீசல் டாங்கர்கள் மூலமாக வழங்கி உதவிகளை செய்து கொண்டு வந்தன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இன்றைய தினம் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் 40% பெட்ரோல் பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற அறிவிப்பால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்தியா உதவிய இலங்கையிலும் தற்போது பெட்ரோல், டீசல்  அதிகளவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top