Connect with us

இலங்கையில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு!! அதிக உயிரிழப்பு நிகழலாம் என்று எச்சரிக்கை!!

medical department

செய்திகள்

இலங்கையில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு!! அதிக உயிரிழப்பு நிகழலாம் என்று எச்சரிக்கை!!

இலங்கையில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு!! அதிக உயிரிழப்பு நிகழலாம் என்று எச்சரிக்கை!!

உலக நாடுகளே அச்சமடையும் வகையில் இலங்கையின் நிலைமை காணப்படுகிறது. ஏனென்றால் இலங்கையின் நாளுக்குநாள் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவிக் கொண்டு வருகிறது.

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் உதவி செய்ய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவதாக காணப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு அங்கன்வாடி கடைகளிலும் விற்பனை நிலையங்களிலும் மக்கள் பல மணி நேரமாக காத்துக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இலங்கையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இலங்கையில் மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லை என்று தேசிய மருத்துவக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருந்து பொருட்களின் விநியோகம் சீர் அடையாவிட்டால் அதிகளவில் உயிரிழப்புகள் நேரிடலாம் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் மிகுந்த பீதியில் நிலவிக் கொண்டு வருகின்றனர். இவ்வாறுள்ள நிலையில் இலங்கை மக்கள் வேறு வழியில்லாமல் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top