Connect with us

உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: இலங்கையில் நோயாளிகள் அவதி !!

tablets

செய்திகள்

உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: இலங்கையில் நோயாளிகள் அவதி !!

உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: இலங்கையில் நோயாளிகள் அவதி !!

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதுநாள் வரை பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு மட்டுமே தட்டுப்பாடு நிலவி வந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மின் வெட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவுவதால் அந்நாட்டு மக்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த  பிப்ரவரி மாதம்  12 – ஆம் தேதி  மருத்துவ சேவையை அத்தியாவசிய இலவச சேவை என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் கள்ளச்சந்தையில் மருந்துகள் முடக்கப்பட்டதால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நோயாளிகள் வெளிசந்தையில் மருந்துகள் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கமுடியாமல் பிச்சை எடுக்கும் நிலையில் தவித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top