தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார். வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் துணிவு படத்தில் படித்து வருகிறார்.
இந்த படம் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து உள்ளார். வருகின்ற பொங்களில் துணிவு படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பானது எகிற செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக இறுதிக்கட்ட டப்பிங் வேலைகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. அதே போல் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன் படி, ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2வது வாரத்தில் மும்பையில் துவங்கி நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தினை அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.