இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட சூட்டிங்! சீக்கிரமாக வருகிறது ‘நானே வருவேன்’!!

தனது நடிப்பாலும் திறமையாலும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் தற்போது வெற்றிநடை போட்டுக் கொண்டுதான் காணப்படுகிறது.

அந்த அளவிற்கு நடிகர் தனுஷ் கதைகளை தேர்வு செய்வதிலும் நடிப்பிலும் மிகவும் மும்முரமாக காணப்படுகிறார். இந்தநிலையில் தற்போது இவர் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படம் உருவாக்கிக் கொண்டுள்ளது.

இந்த திரைப்படத்தினை இவரது அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக சில போஸ்டர்களும் வெளியாகி உள்ளது. இந்த நானே வருவேன் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இயக்குநர் செல்வராகவன் வில்லனாக அல்லது சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே நடிகர் தனுஷ் புதுப்பேட்டை படத்தினை இயக்கி வெற்றி பெற்றார் செல்வராகவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment