அதிர்ச்சி அளிக்கும் மின் கட்டணம்!! ஆளுங்கட்சிக்கு மறுபரிசீலனை செய்ய கூட்டணி கட்சித்தலைவர் வலியுறுத்தல்;

நம் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தற்போதைய மின்வாரிய நலத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.

மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு மின்மாற்றி தான் இருக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அதன்பின்பு நாடாளுமன்றத்தில் மத்திய மின்வாரியத்துறை அமைச்சர் மின் கட்டணம் பற்றி பேசுகையில் எதிர்க்கட்சியினர் பலரும் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வுக்கு ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சித் தலைவர் கருத்து கூறியுள்ளார்.

அதன்படி மின் கட்டணம் உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் சாதாரண மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார் மின் கட்டணம் உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு  திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கின்ற பயணமாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் அமைய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment