
Tamil Nadu
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு! தள்ளிப்போனது தேர்வு;
நம் தமிழகத்தில் இன்றைய தினம் மிக முக்கியமான நாளாகக் காணப்படுகின்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை காலையிலிருந்து பரபரப்பாக நிகழ்ந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் திடீரென்று டிஎன்பிஎஸ்சி ஒரு தேர்வு மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட தேர்வு ஜூலை 2ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜூலை 2ம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
இந்த ஜூலை மாதத்தில்தான் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. அதன்படி ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு தமிழகமெங்கும் நடைபெறுகிறது.
