Connect with us

டீ, காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!

tea kadai

தமிழகம்

டீ, காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!

டீ, காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி !!

வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் எரிவாவு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் சென்னையில் உள்ள டீ கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக சென்னை டீ கடை சங்கம் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையினை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படும் எரிவாயு சிலிண்டர் விலை 2250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகளில் உணவு பண்படங்களில் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இதுவரையில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ 12 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காபி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டீ, காபி பிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது உயர்ந்து இருப்பது கவலை அடைய செய்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top