தரம் இல்லாத ஏலக்காய்! சபரிமலை கோயிலில் திடுக்கிடும் தகவல்..!!

சபரிமலை ஐயப்ப கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயாசத்தில் சேர்க்கப்படும் ஏலக்காயில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் பூச்சிகொல்லி கலக்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள ஐயப்ப கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவணப் பாயாசம் வழங்கு வழக்கம்.

இந்நிலையில் பாயாசத்தில் தரம் குறைந்த ஏலக்காய் சேர்க்கப்படுவதால் ஆய்விற்கு உட்படுத்த உத்திரவிட கோரி ஐயப்பா ஸ்பைசஸ் என்ற அம்மாநில நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனிடையே ஏலக்காய் கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட 3 டெண்டர்களை ரத்துசெய்யக்கோரியும், உள்ளூரில் இருந்து தரம் குறைந்த ஏலக்காய் வாங்கியுள்ளதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார்.

மனுவை விசாரிக்க ஏற்ற நீதிமன்றம் அரவணப் பாயாசத்தில் சேர்க்கப்படும் ஏலக்காய் குறித்து சோதனை நடத்த உத்தரவிட்டது. அப்போது சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.