தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் …பீதியில் மக்கள் – பார்சலில் வந்த மண்டை ஓடு !

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் என்ற பகுதி இருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய இந்த பகுதியில் பள்ளிவாசலில் தலைவராக இருக்கக்கூடிய முகமது காசிம் என்கின்ற என்பவரின் மகன் மகா ஸ்ரீ என்பவருக்கு ஒரு கொரியர் வந்தது.

அந்த கொரியர் மிகவும் பெரியதாக இருந்ததால் அதை பிரித்து பார்த்த பொழுது திடீரென கொரியரை பிரித்ததும் பயங்கரமான துர்நாற்றம் வீசியிருக்கிறது

அதன் உள்ளே பார்த்த பொழுது மண்டை ஓடு இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் என்ன என்று தெரியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள் .உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதை அடுத்து திருவையாறு போலீசார் தற்பொழுது சம்பவ இடத்திற்கு வந்து மண்டையோட கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மண்டை ஓடு பார்சலில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது மற்றும் 10 இலக்க எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த எண்ணை அவர்கள் தொடர்பு கொண்ட பொழுது அந்த எண்ணுக்கு அழைப்பு போகவில்லை. மேலும் இது போலியான ஒரு முகவரி என தெரிய வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இவருடைய தந்தை பள்ளிவாசலுடைய தலைவராக இருக்கிறார்.

விஜய் வீட்டுக்கு வந்து 10 வருஷம் ஆச்சு! அதிர்ச்சி தகவல் கொடுத்த எஸ் ஏ சி.பேச்சு!

இவர்களுக்கு எந்த விதமான ஒரு முன் விரோதமும் இல்லை. ஏன் இப்படி ஒரு மண்டையோடு வந்தது இதை யார் அனுப்பியது என்பது தெரியாமல் திகைத்துப் போய் இருக்கிறார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரிவு போலீசார் தற்பொழுது சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்..

போலீஸ் விசாரணைக்கு பிறகு இதனுடைய உண்மையான காரணம் வெளியே தெரிய வரும் என நம்பப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.